அமெரிக்கா || சிறிய ரக விமானம் விபத்து - 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஆர்கன்சாஸில் விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேசிய விமான நிலையத்தில் இருந்து இரட்டை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 5 பேருடன் ஓஹியோவு ஜான் க்ளென் சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆர்கன்சாஸின் தலைநகரான லிட்டில் ராக்கின் தொழில்துறை பகுதிக்கு வெளியே விமானம் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து இந்த விபத்துக்கு தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் லிட்டில் ராக் பகுதியில் வேகமாக காற்று வீசி இடியுடன் கூடிய மழை பெய்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விமானம் விபத்திற்கான சரியான காரணம் என்னும் கண்டறியப்படாத நிலையில் அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed in small plane crash in America


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->