நேபாளத்தில் விமானம் விபத்து - 32 உடல்கள் கண்டெடுப்பு.! மீட்பு பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 32 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இந்த் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 68 பயணிகள் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் என 72 பேருடன் காலை 10:33 மணிக்கு புறப்பட்ட விமானம் காஸ்கி மாவட்டத்தின் பொக்காராவில் தரையிறங்கும்போது, விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்து 32 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாவும், மீட்புப் பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானத்தில் இருந்த ஊழியர்கள் உட்பட 72 பேரில் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், ஒரு ஐரிஷ், 2 கொரியர்கள், 1 அர்ஜென்டினா மற்றும் ஒரு பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர் என்று ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

32 bodies found in plane crash in Nepal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->