பாகிஸ்தான் சிறையில் சிக்கி தவிக்கும் 308 இந்திய கைதிகள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் சிறையில் சிக்கி தவிக்கும் 308 இந்திய கைதிகள் - நடந்தது என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட இரண்டு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 உள்ளிட்ட இரண்டு தேதிகளில் ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டில் காவலில் உள்ள கைதிகளின் பட்டியலை பரிமாறிக்கொள்கின்றன.

அந்த வகையில், பாகிஸ்தான் அரசு இன்று பாகிஸ்தானில் உள்ள 308 இந்திய கைதிகளின் பட்டியலை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது. அதேபோல், இந்திய சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளின் பட்டியலை இந்திய அரசு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் ஒப்படைத்தது. 

இந்த பட்டியலின்படி, இந்திய சிறைகளில் மொத்தம் 417 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். அவர்களில் 343 பொதுமக்கள் கைதிகள். 74 பேர் மீனவர்கள். இதைத்தொடர்ந்து அனைத்து இந்தியர்கள் மற்றும் இந்திய சிவில் கைதிகள் மற்றும் மீனவ கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. 

இந்த நிலையில், இந்த ஆண்டு பாகிஸ்தானில் இருந்து 398 இந்திய மீனவர்களும் ஐந்து இந்திய சிவில் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

308 prisoners stay in pakisthan jail


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->