ஸ்பெயினில் பற்றி எரியும் பயங்கர காட்டுத் தீ... 3000 ஹெக்டேர் பரப்பளவு எரிந்து நாசம்..! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வலென்சியா பகுதியில் வடக்கே அமைந்துள்ள வில்லனுவேவா டி விவர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் காட்டுத்தீ பற்றி பரவ தொடங்கியது. கட்டுக்கடங்காத தீ வில்லனுவேவா பகுதியை சுற்றியுள்ள மாண்டனேஜோஸ் உள்ளிட்ட மூன்று கிராமங்களுக்கும் வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து மூன்று கிராமங்களிலிருந்தும் 1500 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 3,000 ஹெக்டேர் வனபரப்புகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்நிலையில் 18 சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிராமத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு அவசர உதவியாக 600 பேருக்கு அடைக்கலம் கொடுக்கும் வசதியுடன் கள மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புவீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விஞ்ஞானிகள் கூறும்பொழுது, மேற்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் குளிர்காலத்தில் சராசரியை விட வரண்டு காணப்பட்டதாகவும், மண் மற்றும் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதால் தீ விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3000 Hectors forest burnt as wildfire ravages spain


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->