மிசோரமில் தஞ்சமடையும் மியான்மர் ராணுவ வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


மியான்மரில் கிளர்ச்சியாளர்கள் குழுக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே, கடந்த சில நாட்களாக மோதல் வலுத்து வருகிறது. இதில், மியான்மர் ராணுவத்துக்கு சொந்தமான இரண்டு தளங்களை, கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, மியான்மரைச் சேர்ந்த 45 ராணுவ வீரர்கள், சமீபத்தில் மிசோரமில் தஞ்சம் அடைந்தனர்.

ஆனால், இவர்களை அவர்களின் நாட்டுக்கே நம் நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இந்த நிலையில், மியான்மரைச் சேர்ந்த மேலும் 29 ராணுவ வீரர்கள், மிசோரமில் நேற்று முன்தினம் தஞ்சமடைந்தனர்.

அதாவது அவர்கள், இந்தியா - மியான்மர் எல்லையான, தியாவ் நதிக்கு அருகே உள்ள, சம்பாய் மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகளை அணுகி தஞ்சம் அடைந்தனர். இருப்பினும் இவர்களை மீண்டும் அந்நாட்டுக்கே அனுப்பும் பணியில் நம் நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

மியான்மரில் சண்டை காரணமாக அங்குள்ள மக்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர், சர்வதேச எல்லைவழியாக, நம் நாட்டுக்குள் நுழைவதால், சண்டையை நிறுத்தும் படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

29 miyanmar army soldires migration in mizoram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->