உலகின் எச்.ஐ.வி நோயிலிருந்து குணமடைந்த முதல் பெண்.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகிலேயே எச்ஐவி தொற்று நோயிலிருந்து குணமடைந்த முதல் பெண்ணாக கருதப்படுகிறார்.

மேலும், எச்ஐவி தொற்றில் இருந்து குணமடைந்த மூன்றாவது நபர் இவர் என்பதும், முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆராய்ச்சி அறிக்கையில் ஆண்டிரெட்ரோவைரல் சிகிச்சையை நிறுத்திய பிறகும் அவரது உடலில் எச்ஐவி வைரஸ் இருப்பதற்கான அளவீடுகள் கடந்த 14 மாதங்களில் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெம்செல் சிகிச்சையளிக்கப்பட்டு எச்.ஐ.வியில் இருந்து குணமடைந்த மூன்றாவது நபர் இவர் என்று தேசிய சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு பேருக்கு இந்த சிகிச்சை பயன் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பெர்லின் மற்றும் லண்டனைச் சேர்ந்த இரண்டு நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1st women cure in HIV


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->