சீனா :: 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - 16 பேர் பலி, 66 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


சீனாவின் ஹுனான் மாகாணத்தின் நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். 

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தின் தலைநகர் சாங்ஷாவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் திடீரென அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 10 நிமிடங்களுக்குள் ஏறக்குறைய 50 வாகனங்கள் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

மேலும் இந்த விபத்தில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்நிலையில் இந்த பயங்கர விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 people died and 66 injured when 50 vehicles collided with each other in china


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->