ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் பலி!! வங்கதேசத்தை உலுக்கிய கோர சம்பவம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு மாகாணத்தின் பஹிராப் என்ற இடத்தில் பயணிகள் ரயில் மீது எதிரே வந்த சரக்கு ரயில் மோதியது. இந்த விபத்தால் பயணிகள் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் தற்போது வரை 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்த இடிபாடுகளின் சிக்கி உள்ள பயணிகளை மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என வங்கதேச ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 people died in Bangladesh Train Accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->