மக்களே உஷார்..சிக்கன் ரைஸ் சாப்பிட்ட குடும்பத்திற்கு உடல் நலக்குறைவு!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஜீவானந்தம் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணி அளவில் தேவாராயன்புரத்தை சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரியின் மாணவர் பகவதி என்பவர்  ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார். 


பின்னர்,7 பார்சல் சிக்கன் ரைஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று தனது தாயார் மற்றும் தந்தைக்கு உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளார். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட அனைவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி உள்ள  மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இது குறித்த தகவல் அறிந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேற்று சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டை தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. சிக்கன் ரைஸ் உணவை மாதிரி சேலம் உணவு பகுத்தாய்வு கூடத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People beware chicken rice family hospital


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->