இந்தோனேசியாவில் பயங்கர நிலச்சரிவு - 11 பேர் பலி, 50 பேர் மாயம்.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருவதால் தலைநகர் ஜகார்டா உட்பட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் இந்தோனேசியாவின் வெளிப்புற தீவுகளில் ஒன்றான ரியாவ் தீவு மாகாணத்தில் உள்ள செராசன் தீவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிப்பதாலும், காலநிலை சிரற்ற நிலையில் இருப்பதாலும் மீட்புப் பணிகள் மிகுந்த சவாலாக இருப்பதாக பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணியை துரிதப்படுத்துவதற்காக தேசிய பேரிடர் பாதுகாப்பு நிறுவனம் நாளை ஹெலிகாப்டரை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 died and 50 missing in landslide in indonesia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->