இத்தாலியில் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்.! 10 பேர் பலி - Seithipunal
Seithipunal


இத்தாலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியின் மத்திய நகரமான மார்ச்சே மற்றும் மலைப்பாங்கான பகுதியில் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்துள்ள கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

400 மில்லிமீட்டருக்கும் மேல் பதிவான மழையால் மார்ச்சே, அன்கோனா பகுதியில் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மின்தடை மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இதுவரை சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளனர் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 died in flood in italy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->