வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பா..? - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 23) காலை 05.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளிலும், கடலுக்கு அப்பாலும் வரும் 24-ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், மேற்கு வங்கம் முதல் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சத்தீஸ்கர், கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அத்துடன், அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா, கடலோர கர்நாடகா, கிழக்கு உத்தரப் பிரதேசம், கங்கை சமவெளி மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், கேரளா மற்றும் மாஹே, மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா, தெற்கு உள் கர்நாடகா, தெலங்கானா, உத்தரகாண்ட் மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu will be affected as a low pressure area has formed in the Bay of Bengal


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->