புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கம் - சென்னை வானிலை மையம்! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் மையம் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் உள்ள திருகோணமலை அருகே நேற்று காலை கரையை கடந்தது.

அதன் காரணமாக தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று காலை முதல் பெரும்பாலான தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கண்ட அனைத்து பகுதிகளுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததையடுத்து புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Take down storm warning cages


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->