வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் - டெல்டா வேதேர்மேன் கணிப்பு!
Northeast Monsoon Rain IMD delta weather man
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இம்மாதத் தொடக்கத்தில் சற்றுத் தொய்வுற்றிருந்தாலும், கடந்த மூன்று நாட்களாக மீண்டும் பரவலாகப் பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.
இதன் தொடர்ச்சியாக, நாளை மறுநாள் (நவம்பர் 22) இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மழைக்கான வாய்ப்பு:
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இது குறித்துத் தெரிவிக்கையில், இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியின் காரணமாகத் தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 21) முதல் நவம்பர் 24 (திங்கட்கிழமை) வரையிலான 4 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யக்கூடும்.
புயல் உருவாவதற்கான வாய்ப்பு:
மேலும், நவம்பர் 24-ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நவம்பர் 22-ஆம் தேதி உருவாகும் தாழ்வுப்பகுதி புயலாக மாறுமா?
அல்லது அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவாகி வரக்கூடிய தாழ்வுப்பகுதி புயலாக மாறுமா? என்பது குறித்து, நவம்பர் 26-ஆம் தேதிக்குப் பிறகுதான் தெளிவாகக் கூற முடியும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த சில நாட்களுக்குத் தமிழகத்தில் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Northeast Monsoon Rain IMD delta weather man