அரபிக் கடலில் சுழற்சி!! தமிழகத்தையே புரட்டிப் போடும்!! பகீர் கிளப்பும் வானிலை ஆய்வு மையம்!! - Seithipunal
Seithipunal


தென் தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழக முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அக்டோபர் 17ஆம் தேதி உருவாகி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMD info low pressure area formed in Arabian Sea on Oct17


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->