அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..! சூறையாட தயாராகும் மழை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை  தீவிரம் அடைந்துள்ளது, எனவே, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழையின் அளவானது மேலும் அதிகரிக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது.

மேலும், இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக தேனி போன்ற மேற்கு மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

Related image

கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது, இதனால் ஒருசில குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் தாழ்வுப்பகுதியால் மேலும் மழை வலுக்கும் என்ற தகவலால் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. 

மேலும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சென்னை போன்ற பல நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் மழை வேண்டி பிரார்த்தனை செய்த பொதுமக்கள் தற்போது மழை போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

December 1 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->