மோந்தா புயல் தீவிரம் ...! –1 மணி வரை சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த 26ஆம் தேதி உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலிமை பெறி ‘மோந்தா’ புயலாக (Cyclone Monda) உருவெடுத்துள்ளது. இது தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரமடைந்த நிலையில், வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இந்த புயல் தற்போது ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து 270 கி.மீ தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகரும் இது, இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் வேளையில் 90 முதல் 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், கடல் பெரும் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மோந்தா புயலின் வெளிப்புற வலயங்கள் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் நேற்று மாலை முதல் தடம் மாறாத கனமழை பெய்து வருகிறது.

இன்று காலை முதல் மிதமான மழை தொடர்ந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்திற்கான அவசர மழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி பிற்பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை,திருவள்ளூர்,திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கன்னியாகுமரி,தென்காசி,திருநெல்வேலி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyclone Montha intense Rain warning 11 districts including Chennai until 1 am


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->