வருகிறது சியோமி : ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன்! - Seithipunal
Seithipunal



சியோமி நிறுவனம், ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. 

இருப்பினும், புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அடுத்த வாரமே இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல், ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. 

மேலும், இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 10 5ஜி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. மேலும், இந்தியாவில் புதிய ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.  

சிறப்பு அம்சங்கள்: 

• ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலில் 6.58 இன்ச் IPS LCD 1080x2048 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

• 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது.

• அதிகபட்சம் 6 ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், எல்இடி பிளாஷ் மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 

• இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த MIUI 13 கொண்டிருக்கும் என தெரிகிறது. 

• இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Xiaomi Redmi 11 Prime 5G smartphone Price Details


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->