புதிய நிபந்தனைகள் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்.!
whatsapp new policy
வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகள் மற்றும் ரகசிய காப்பு விதிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலில் வரும் என்றும், இதனை பயனாளர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவர்களின் வாட்சப் செயலி முடக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பயனாளர்களின் தகவல்கள், அலைபேசி எண், முகவரி, தினமும் வைக்கும் ஸ்டேட்டஸ், பணபரிவர்த்தனை என அனைத்துமே வாட்ஸ் அப்பால் சேகரித்து வைக்கப்படும். வாட்ஸ்அப் மூலமாக நடைபெறும் புதிய பண பரிவர்த்தனை என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தி, இந்த விவரங்களை சேமித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எந்தவிதமான அலைபேசியை பயன்படுத்துகிறோம்?, எங்கு செல்கிறோம்? என்பதையும் இதன் மூலமாக கண்காணிக்கும். நமது வங்கிக் கணக்கு தொடர்பான விவரத்தையும் கண்காணிக்கும். நாம் எந்த வகையான பொருட்களை வாங்குகிறோம்?, எப்படி பணத்தை செலவழிக்கிறோம்? என்ற தகவலையும் அது சேமித்து வைத்துக்கொள்ளும்.

பயனாளர்கள் குறித்த விவரங்களை முகநூல் ஏற்கனவே பிற தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவது தெரியவந்துள்ள நிலையில், வாட்ஸ்அப் மூலமாகவும் இது அரங்கேற்றலாம் என அஞ்சப்படுகிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கில், வாட்ஸ்அப்பின் தலைமை நிறுவனமான ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது. தனி நபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி பேஸ்புக்குக்கு பரிமாற்றம் செய்யப்படாது. வாட்ஸ்அப் குரூப்பில் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும். பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ் விவரத்தை சேகரித்து வைக்க மாட்டோம். பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.