"இது என்னவாக இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்" - களத்தில் இறங்கிய ஒன்பிளஸ்.! - Seithipunal
Seithipunal


சாம்சங், சியோமி, மோட்டோரோலா உள்ளிட்ட நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், கூகுள் நிறுவனமும் தனது பிக்சல் போல்டு மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து தற்போது ஒன்பிளஸ் நிறுவனமும் போல்டபில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க முடிவு செய்துள்ளது.

இதன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர்கள் வெளியாக துவங்கியுள்ளன. இதனை அடுத்து, ஒப்போ நிறுவனம் இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஹூவாய், சாம்சங் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் 2019-ம் ஆண்டிலேயே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. 

இதனால் அப்போதில் இருந்தே இந்த நிறுவனங்களின் போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்கள் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. 

இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், போல்டபில் ஸ்மார்ட்போன் ஹின்ஜ் புகைப்படத்தை "இது என்னவாக இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்" என்ற கேள்வியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

போல்டபில் ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ஒப்போ பைண்ட் N மாடலின் ஹின்ஜ் போன்றே காட்சியளிக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one plus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->