எதிர்பார்க்கப்பட்ட நாசா படம் வெளியானது! லேண்டர் விக்ரம் எங்கே இருக்கு தெரியுமா?  - Seithipunal
Seithipunal


சந்திரயான் 2 லேண்டர் விக்ரம் ஆனது நிலவின் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, விக்ரம் களமிறங்கிய பகுதியை இலக்காக கொண்டு, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் LROC படம்பிடித்துள்ளது. 

லேண்டர் விக்ரமானது சிம்பிலியஸ் என் மற்றும் மான்சினஸ் சி பள்ளங்களுக்கு இடையில் ஒரு சிறிய சமவெளிப்பகுதியில் தரையிறங்க முயன்ற பொழுது, மிக வேகமாக சென்று தாறுமாறாக தரை இறங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2 லேண்டர் விக்ரமானது செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் மென்மையான தரையிறக்க முறையில் தரையிறக்கப்பட்டது. இறங்கிக் கொண்டிருக்கும் பொழுதே 2 கிலோ மீட்டருக்கு முன்  தொடர்பை இழந்த விக்ரம் எங்கே விழுந்தது என்று தெரியாமல் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி லேண்டர் விக்ரம் எங்கே இருக்கும் என்பது குறித்து, அமெரிக்காவின் நாசா அனுப்பிய ஆர்பிட்டர் LROC படம் பிடித்து அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது படம் பிடிக்கப்பட்ட படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை LROC ஆர்பிட்டாராலும் லேண்டர் விக்ரமை கண்டுபிடிக்கவோ அல்லது படம் பிடிக்கவோ முடியவில்லை. 

லேண்டர் விக்ரம் தரையிறக்கப்ட்ட பகுதிதான் படமாக்கப்பட்டுள்ளது. படமாக்கப்பட்ட போது, அந்த பகுதி அப்போது இருள் சூழ்ந்ததாக இருப்பதால் அதிகளவில் நிழல்கள் இருந்ததால் விக்ரம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் ஏதேனும் ஒரு நிழலில் விக்ரம் மறைந்து இருக்க வாய்ப்புள்ளது எனவும் கருதப்படுகிறது. மேலும் சந்திரனின் சுழற்சி காரணமாக அடுத்த முறை அக்டோபரில் LROC ஆர்பிட்டர் படம் பிடிக்கும் பொழுது விக்ரம் தரையிறங்கிய பகுதியில் வெளிச்சம் இருக்கும் என்பதால் அப்பொழுது விக்ரம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிடலாம் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new image released by NASA about vikram lander


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->