உங்கள் கணினி பாதுகாப்பாக இருக்கிறதா? - Seithipunal
Seithipunal


CPU :

கணினிக்கு முக்கியமானது CPU. இந்த CPU-வை மட்டும் நன்றாக பராமரித்தால் போதும். கண்டிப்பாக கணினியை ரிப்பேர் ஆகாமல் தடுக்கலாம்.

இதை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை. தூசி வராமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். தூசிகள் வந்தால் CPU-க்குள் உள்ள நுணுக்கமான பகுதிகளை ரிப்பேர் செய்துவிடும்.

குறிப்பாக கணினியில் உள்ளே உள்ள சின்ன சின்ன பேன்களில் தூசிகள் ஒட்டினால் அதன் வேகம் குறைந்துவிடும். CPU-வின் ஹீட் வெளியில் வராமல் உள்ளேயே இருந்தால் CPU அதிகம் ஹீட் ஆகிவிடும்.

கணினியை Computer cleaning brush வைத்து சுத்தம் செய்யலாம். தூசி அதிகம் உள்ள பகுதிகளில் சுத்தம் செய்தால் தூசுகளும் வெளியில் பறந்துவிடும்.

KeyBoard :

கீபோர்டை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமே தவிர, அதை சுத்தம் செய்வது கிடையாது. கீபோர்ட் பட்டன்களில் உள்ள தூசிகளை துடைப்பதே இல்லை.

எதையாவது சாப்பிட்டு கொண்டே கணினியை உபயோகப்படுத்தினால், அந்த உணவு துணுக்குகள் கீபோர்டில் ஒட்டிக்கொள்ளும். குறிப்பாக டீ, காபி குடிக்கும்போது தவறி கீபோர்டில் கொட்டிவிட்டால் அந்த கீ-யில் அப்படியே ஒட்டிக்கொள்ளும் அல்லது அதில் நிறைய பசைத்தன்மை ஏற்படும்.

கீபோர்ட் இடுக்குகளில் உள்ள அழுக்குகளைப் போக்க கீபோர்டை அப்படியே தலைகீழாக கவிழ்த்து இலேசாக தட்டினால் அதிலிருக்கும் குப்பைகளும், தூசிகளும் கொட்டிவிடும்.

மெலிதான துணியில் தண்ணீரில் ஒத்தி கீபோர்ட் முழுவதும் துடைத்து சுத்தம் செய்யலாம்.

Mouse :

நாம் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு கணினியின் துணை சாதனம் Mouse. இந்த ஆழரளந-யை அங்கும் இங்கும் ஆட்டுவதிலும், கிளிக் செய்வதிலும் உள்ள கவனம் அதற்கு அடியில் ஏற்படுகிற அழுக்குப் படிவு, பட்டன்களுக்கிடையே உள்ள தூசி இவற்றை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.

Mouse-ன் மேல்பகுதி, கீழ்பகுதியை மெல்லியதான துணியை ஈரப்படுத்தி துடைத்து சுத்தம் செய்யலாம்.

Screen :

நமக்கு காட்சியை தருவது Computer Screen. இதை நாம் துடைத்து தான் வைத்திருப்போம். அவசர அவசரமாக துடைப்பதால் நடுப்பகுதி மட்டும் சுத்தமாக இருக்கும். மற்ற பகுதிகள் அழுக்காகவும், சுத்தமில்லாமலும் இருக்கும்.

ஸ்கிரீனின் ஓரப்பகுதிகளை சுத்தமாக துடைக்க வேண்டும். மெலிதாக உள்ள வெல்வெட் துணிகளை கொண்டு துடைத்தால் ஸ்கிரீனில் கீரல் விழாமல் இருக்கும்.

வாரம் ஒரு முறையாவது கணினியை சுத்தம் செய்தால் கண்டிப்பாக கணினி ரிப்பேர் ஆகாமல் இருக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is your computer safe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->