கூகுள் விடுத்த எச்சரிக்கை! ஜி-மெயில் பயன்படுத்தும் மக்களே உஷார்! - Seithipunal
Seithipunal


கிருஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் நடக்க கூடிய மோசடிகள் மற்றும் முறைகேடு குறித்த தகவல்களில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, ஜி-மெயில் மின்னஞ்சல் மூலம் கூகுள் எச்சரித்துள்ளது. அதன்படி,


* என் பணம் அறக்கட்டளையில் சிக்கியுள்ளது. நீங்கள் உதவி செய்தல் அந்த பணத்தில் உங்களுக்கு பாதி தருகிறேன் என்றும், நன்கொடை கேட்டு வரும் அழைப்புகளிலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

* பரிசுப் பொருள் தருவதாக ஆசைக்காட்டி, உங்களை நம்ப வைத்து, நீங்கள் உங்களின் கிரெடிட் கார்டு எண்ணைக் கொடுத்தால் அதற்கு பரிசுப் பொருள் அனுப்புவதாக மோசடி நடக்கலாம்.

* ஒருவேளை நீங்கள் அவர்களின் பேச்சை நம்பி பரிசுப்பொருள்கள் எல்லாம் உண்மையாக இருந்தால் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தால் அது மோசடியாகவே அமையும்.

* உங்களின் சந்தா புதுப்பிப்பு போன்ற மின்னஞ்சல்கள், கிரிப்டோ முறையிலான மோசடிகளும் அவ்வப்போது நடக்கின்றன. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

* பரிசுக் கூப்பன், அறக்கட்டளை பணம், பரிசுப் பொருள் என்கின்ற பெயரில் மோசடி, சந்தா புதுப்பிப்பு, கிரிப்டோ மோசடிகளில் இருந்து  மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 1500 கோடி தேவையற்ற மின்னஞ்சல்கள் தடுக்கப்படுகிறது. அதையும் மீறி சில மின்னஞ்சல்களை நம்பி பயனாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்" என்று கூகுள் தெரிவித்துள்ளது.

 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google warning


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->