பேஸ்புக் நிறுவனம் திடீர் முடிவு.. டிசம்பர் 1 முதல் புதிய விதி.!  - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் பேஸ்புக் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டு வருகின்றது. இந்த பேஸ்புக் மூலம் பலரும் தங்களது வீடியோக்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார்கள். 

இதில் இருக்கும் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பேஸ்புக் நிறுவனம் நிறைய வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இதற்கிடையில் பேஸ்புக்கில் ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு இருக்கின்றது. இதனை தொடர்ந்து, பேஸ்புக் கடவுச்சொல்லை மற்ற செயல்களில் பயன்படுத்த வேண்டாம் என்று அந்த நிறுவனம் பயனாளர்களை அறிவுறுத்தியது. 

இதனை அடுத்து தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, பேஸ்புக் பயனாளர்கள் தங்களது பேஸ்புக் கணக்கில் இருக்கும் தேவையற்ற தகவல்களை நீக்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனாளர்கள் கணக்கை துவங்கும் போது நீண்ட படிவத்தை நிரப்பிய பின் தான் அனுமதிக்கப்படுகின்றனர். 

இதனை தொடர்ந்து அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் இருந்து பொலிடிகல் வியூஸ், அட்ரஸ் மற்றும் ரிலீஜியஸ் வியூஸ் உள்ளிட்ட தகவல்களை நீக்க பேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

facebook remove some features from dec 1


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->