600 கணக்குகள்... 3500 சட்டவிரோத பதிவுகள் நீக்கம்...! - Grok சர்ச்சை
600 accounts 3500 illegal posts removed Grok controversy
எலான் மஸ்க் சொந்தமான சமூக ஊடக தளம் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) மற்றும் அதன் Grok ஏஐ சாட்போட் தொடர்பாக, சமூக விரோதிகளால் பெண்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 2-ம் தேதி மத்திய அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான நோட்டீஸ் அனுப்பியது.

அதன் படி, 72 மணி நேரத்திற்குள் அனைத்து ஆபாச உள்ளடக்கங்களையும் நீக்க வேண்டும், சரியான விளக்கத்துடன் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எக்ஸ் நிறுவனம் தவறை ஒப்புக்கொண்டு, இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவதாக உறுதி அளித்துள்ளது.
அரசின் உத்தரவிற்கு இணங்க, 600 கணக்குகள் மற்றும் 3,500க்கும் மேற்பட்ட சட்டவிரோத உள்ளடக்கங்கள் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இந்திய அரசு சமூக ஊடகங்களில் அபாயகரமான ஏஐ பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் தன்னிச்சையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
English Summary
600 accounts 3500 illegal posts removed Grok controversy