ஈரோடு | நூற்றுக்கணக்கில் மாத்திரைகள்! விசாரணையில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


ஈரோடு, ஈ.பி.பி. தெருவில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 3 வாலிபர்கள் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். 

இதனை அடுத்து அந்த வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த் (வயது 26), அமீர் (வயது 23), தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கௌதம் (வயது 26) என்பது தெரியவந்தது. 

பின்னர் போலீசார் அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது அவர்களிடம் வலி நிவாரண மாத்திரைகள் மருத்துவர் ஆலோசனை இன்றி போதை மாத்திரைகளாக விற்பனை செய்தது தெரிய வந்தது. 

போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 420 வலி நிவாரண மாத்திரைகளையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youths selling pain reliever pills


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->