கள்ளகாதலியுடன் யார் பழகுவது என்ற போட்டி., வாலிபர் குத்தி கொலை..! கடலூரில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


இளம்பெண்ணுடன் யார் பழகுவது என்ற தகராற்றில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியில் சேர்ந்தவர் அருண். இவரின் தாயும் தந்தையும் பிரிந்து வாழ்ந்து வருவதால் விருதாசலத்தில் உள்ள தனது தாயை பார்க்க அடிக்கடி வந்து செல்வர.

இந்நிலையில், அவர் உயிருக்கு போராடிய நிலைமையில் சாலையில் கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த 108 ஆப்புலன்ஸ் அவரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அருணின் செல்போனை ஆராயும் போது அவர் விருதாச்சலத்தை சேர்ந்த நபீஸ் என்பவருடன் பேசி இருப்பது தெரியவந்து இதனை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளும் போது தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

நபீசின் நண்பர்களான மனோஜ் , பிரேம்குமார், கலைச்செல்வன் என்பவர்களுடன் அருணும் சேர்ந்து நபிசின் வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தனர். மனோஜ் , பிரேம்குமார், கலைச்செல்வன் மற்றும் அருணுக்கு சிறு வயது முதலே பழக்கம் இருந்துள்ளது.

இதில் பிரேம்குமாரும் அருணும் சென்னை மெரினா கடற்கரையில் சாவியில் பெயர் அச்சிடும் தொழில் செய்து வந்துள்ளனர். அங்கு மீன்விற்கும் பெண் ஒருவருடன் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தனிதனியே அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுவபவித்து வந்துள்ளனர். இந்நிலையில், மது அருந்தும் போது அந்த பெண்ணுடன் யார் தொடர்பு வைத்து கொள்ள வேண்டும் என்ற வாக்குவாதம் ஏற்படவே பிரேம்குமாரை அருணை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனை கண்ட மற்ற நண்பர்கள் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் அருணை நடுரோட்டில் போட்டு விபத்து ஏற்பட்டது போல சித்தரிக்க முயன்றதாகவும் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளகாதல் தகராற்றால்  நண்பனையே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth stabbed to death in Cuddalore


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal