இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சரக்கு லாரி.. பரிதாபமாய் பலியான இளைஞர்..! - Seithipunal
Seithipunal


இரு சக்கர வாகானம் மீது சரக்கு வேன் மோதியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், தமனம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல். இவர் தனது நண்பர்களான துளசி, குமார் ஆகியோருடன் தனது இருசக்கர வானகத்தில் வேடச்சந்தூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்டு கொண்டிருந்தார்.

அப்போது, அந்த சாலையில் சென்ற மினிசரக்கு வேன் இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சக்திவேல் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth death in Accident Near Dindugal


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->