ரயிலில் தள்ளிவிட்டு இளம் பெண் கொலை.. அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை  ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

காதல் என்ற பெயரில் வற்புறுத்தல், கொலை, பலாத்காரம் என்று பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. தான் காதலிக்கும் பெண் தனது காதலை ஏற்காவிட்டால் கூட ஆசிட் அடிப்பது, வெட்டி கொலை செய்வது என்று பல்வேறு கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.

அத்துடன், கொலை செய்வது மட்டுமல்லாமல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தும், நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் கொடுமையும் அரங்கேறி வருகின்றது. அப்படிப்பட்ட ஒரு கொடுமை தான் தற்போது அரங்கேறி உள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செயலை செய்த இளைஞர் பெண்ணை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடு உள்ளார்.

அதில், சிக்கிய அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு தப்பியோடிய சதீஷ் என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர். இதனிடையே ஓடும் ரயில் முன்பு மகள் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young woman killed train Chennai Father died of heart attack


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->