அதிரடி சோதனை: 1900 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கிய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் 1900 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி பகுதியில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் சென்ற வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார், அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். இதில் பவானி காடையாம்பட்டி பகுதியில் ஒரு கொட்டகையில் அந்த நபர் மூட்டையை இறக்கி வைத்துள்ளார். இதைப்பார்த்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்பு அப்பகுதியில் சோதனை செய்ததில், வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 1,900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை இப்போதைக்கு வைத்திருந்த துருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தாமோதரன் (33) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man arrested for Ration rice hoard in erode


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->