அதிர்ச்சி...! மதுபோதையில் நிலைகுலைந்த தொழிலாளி...! - மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள அயன்பொம்மையாபுரம், வண்டிமலச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமன் மகன் கோவிந்தராஜ் (38) கூலித் தொழிலாளியாக உழைத்து வந்தார்.

குடும்பத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி அப்பகுதியில் செயல்படும் ஒரு பால் பண்ணையில் பணிபுரிந்து குடும்பத்துக்கு துணையாக இருந்து வருகிறார்.

கோவிந்தராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் நடந்த இரவு, அவர் அதிகளவில் மது அருந்திய நிலையில் வீட்டின் மாடிக்குச் சென்று உறங்க முயன்றுள்ளார்.

அப்போது திடீரென சமநிலை குலைந்து, மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், விளாத்திகுளம் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோவிந்தராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker collapses under influence alcohol Dies after falling from floor


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->