கரோனா நெருங்காமல் இருக்க கோதுமை விளக்கேற்றி வழிபட பெண்கள்!!  - Seithipunal
Seithipunal


ரோனா வைரஸ் தற்போது உலக அளவில் பரவி வருகிறது. இந்தக் கொடூர அரக்கனை அழிக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் நேற்று ஒரு தகவல் பரவியுள்ளது. அதாவது ஒரு வீட்டில் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதற்கு ஏற்ப கோதுமை மாவினால் செய்த விளக்குகள் ஏற்றி இஷ்ட தெய்வங்கள் முன்பு வைத்து வழிபட வேண்டும் என்று தகவல் பரவியுள்ளது.

இதனால் பெண்கள் அனைவரும் வீட்டின் முன்பு கோலமிட்டு விளக்குகளை நடுவில் வைத்து வழிபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்காது என்று தகவல் பரப்பப்பட்டு உள்ளது.

இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவி அனைவரும் அவர்களது உறவினர்கள் நண்பர்கள் நலம் விரும்பிகள் என்று தகவலை பகிர்ந்து கொண்டே இருந்தனர். இதனால் சென்னை ஆயிரம் விளக்கு மாதவரம் புரசைவாக்கம் மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோதுமை மாவினால் விளக்குகள் ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women pray with lights to protect from Corona 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->