மகனுக்காக "ஓட்டு கேட்டு வந்தால் கல்லால் அடிப்போம்".. ப.சிதம்பரத்தை ஓட விட்ட பெண்கள்.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கள் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அவருக்காக ஓட்டு கேட்டு வந்தால் கல்லால் அடிப்போம் என அவருடைய தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான பா சிதம்பரத்தை நோக்கி பெண்கள் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ‌. 

சிவகங்கை தொகுதிக்குட்பட்ட காரைக்குடி அருகே மித்ராவாயில் என்ற பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பாச்சி சிதம்பரம் தனது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்காக வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக கார்த்திக் சிதம்பரம் தொகுதி பக்கமே வரவில்லை. 

மித்ரா வாயில் கிராமத்திற்கு கார்த்திக் சிதம்பரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கிராமத்திற்குள் வந்தால் கல்லால் அடிப்போம். 

கார்த்திக் சிதம்பரத்திற்காக வாக்கு கேட்டு வந்தால் ப.சிதம்பரத்தையும் கல்லால் அடிப்போம் என பாச்சிதம்பரத்தை பிரச்சாரம் செய்யவிடாமல் அங்கு இருந்த பெண்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். பெண்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் பிரச்சாரத்தை பாதிலேயே முடித்துக் கொண்டு ப.சிதம்பரம் புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women obsessed if Chidambaram ask for votes we attack with stones


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->