குமரி || உல்லாசத்திற்கு இடையூறு - 15 மாதக் குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற கள்ளக்காதல் ஜோடி.!!
women kill 15 month baby with boy friend in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரையுமன்துறை பகுதியை சேர்ந்தவர்கள் சீனு-பிரபுஷா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரபுஷாவின் வீட்டிற்கு அருகே காஞ்சாம்புறத்தை சேர்ந்த சதாம் உசைன் என்பவர் ஓட்டல் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், பிரபுஷாவுக்கும், சதாம் உசைனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சீனு முதல் குழந்தையை தன்னுடன் அழைத்துக்கொன்று மனைவியை விட்டு பிரிந்துச் சென்று விட்டார். இளைய மகனை பிரபுஷா வைத்திருந்தார்.

இதையடுத்து பிரபுஷாவும், சதாம் உசைனும் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி மயிலாடியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தனர். அப்போது தாங்கள் தம்பதியினர் என்று கூறி, அங்கேயே 2 நாட்கள் தங்கியிருந்தனர். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்த போது பிரபுசாவின் 15 மாதக் குழந்தை பசியால் அழுதுள்ளார்.
இது அவர்களுக்கு இடையூறாக இருந்ததால், ஆத்திரமடைந்த சதாம் உசைன் குழந்தையை கம்பால் தாக்கி, மதுபானம் கொடுத்து, சிகரெட் நெருப்பால் குழந்தைக்கு 10 இடங்களில் சூடு வைத்து, வெந்நீரில் முக்கி தூக்கி தரையில் வீசியுள்ளார்.
இதனால், அந்தக் குழந்தை பலத்தக் காயமடைந்ததால் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்குக் குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, குழந்தை சித்ரவதை செய்து கொல்லப்பட்டது தெரிய வந்ததும் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீசார் விரைந்து வந்து கள்ளக்காதல் ஜோடியை மடக்கி பிடித்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதாவது குற்றம் சாட்டப்பட்ட சதாம் உசைன், பிரபுஷாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary
women kill 15 month baby with boy friend in kanniyakumari