குழந்தைகளுடன் மீட்கப்பட்ட பெண் சடலம் - தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே உத்தாணி குடமுற்று ஆற்றுப்பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள், கண்டெடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பெண் ஒருவர் தனது இரன்டு பெண் குழந்தைகளுடன் செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து உயிரிழந்தோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இறந்த நபர்களின் விவரங்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். பெண் ஒருவர் தன் பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide with childrens in thanjavur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->