அரசு பள்ளிக்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்த இளநீர் விற்கும் பெண்மணி- பிரதமர் மோடி பாராட்டு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை-திருப்பூர் சாலையில் தாயம்மாள் என்ற பெண்மணி தனது கணவருடன் சேர்ந்து இளநீர் விற்பனை செய்து வருகிறார்.

இவர்களுடைய பிள்ளைகள் சின்னவீரம்பட்டி யில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் ஒருநாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆசிரியர்கள் பள்ளியை விரிவுபடுத்த தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கூறியுள்ளனர்.

அதனைக் கேட்ட தாயம்மாள் தனது கணவருடன் இளநீர் விற்று சேமித்த ஒரு லட்சம் ரூபாயை அரசுப் பள்ளிக்கு தங்களது பரிசாக வழங்கியுள்ளார். இதனை அறிந்த பலரும் அந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று உடுமலைப்பேட்டை தாயம்மாளின் உயர்ந்த குணம் குறித்து மனதின் குரல் எனும் மன்கீபாத் நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman selling water donated 1 lakh rupees to a government school


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->