கடன் தொல்லையால் பெண் தற்கொலை.. புதுகோட்டை அருகே நிகழ்ந்த சோகம்..! 
                                    
                                    
                                   Woman Committed suicide due to Loan Issue  near Kandharvakottai
 
                                 
                               
                                
                                      
                                            கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுகோட்டை மாவட்டம், மல்லிகை நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் பழனியாண்டி . இவருக்கு திருமணமாகி இந்திரா  என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் பல இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

அதில் பலர் திரும்ப கேட்டு தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் மன உளைச்சலில் இருந்த  அவர் வீட்டில் யாரும் இல்லாத போது விஷமருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கதினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       Woman Committed suicide due to Loan Issue  near Kandharvakottai