#மதுரை || கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி(30). இவரது மனைவி அம்சவள்ளி(26). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சமயநல்லூரில் நடைபெற்ற உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பால்பாண்டி தனது மனைவியுடன் சென்றுள்ளார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பால்பாண்டி, அம்சவள்ளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் பால்பாண்டி மனைவியை திட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அம்சவல்லி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் மனவேதனை அடைந்த அம்சவள்ளி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அம்சவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife commits suicide by hanging herself in a dispute with her husband


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal