திமுகவிற்கு எதற்கு இந்த குழப்பவாதம்? இரட்டை வேடம்?ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை வாங்க உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்! - Seithipunal
Seithipunal


சட்டம் ஒழுங்கு விவதாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது! விரும்பத் தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது! - நாதக சீமான்!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 6ஆம் தேதி பேரணி நடத்திக் கொள்ள ஆர்எஸ்எஸ் க்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தீர்ப்பிற்கு தமிழக அரசும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்த தீர்ப்பினை பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர் .

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் " மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்ட ஒழுங்கு காரணம் காட்டி பேரணிக்கு அளித்த தடையை நீதிமன்றம் நீக்கினால் அதனால் விளையக்கூடிய விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? 

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு தமிழகத்தின் பெருவாரியான கட்சிகளும் பொதுமக்களும் ஒருமித்த எதிர்ப்பு தெரிவிப்பது தமிழகத்தில் நிலவிவரும் மதநிலக்கணத்தையும் சகோதரத்துவம் மனப்பான்மையையும் சிதைத்து விடக்கூடாது என்கின்ற பொது நோக்கத்திற்காக தான்! 

அந்த உணர்வின் பிரதி பலனாகவே தமிழக அரசும் அனுமதி வழங்காமல் பேரணிக்கு தடை வைத்தது. மாநிலத்தின் நலன் கருதி மக்களின் பாதுகாப்பை மனதிற்கு கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கும் இத்தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு வித்திடுகிறது.

மதுபான கடைகளை மூடக்கோரி சமூக ஆர்வலர்களால் தொடுக்கப்படுகிற பொதுநல வழக்குகளில் அரசின் கொள்கை முடிவுகளில் தடை இட முடியாது என்று கூறி தட்டிக் கழிக்கும் நீதிமன்றம். மத சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அரசு எடுத்த கொள்கை முடிவை செயல்படுத்த விடாதது ஏன்?

மாணவர்கள் மருத்துவம் படிக்க கட்டாய நீட் தேர்வு வேண்டுமென்ற அரசின் முடிவை ஏற்கிற நீதிமன்றம் இப்பேரணி விவகாரத்தில் மட்டும் விதிவிலக்கு கடைப்பிடிப்பது ஏன்?

சட்ட ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என எடுத்துரைத்தும் நீதிமன்றம் அவமதிப்பு என கூறி பேரணியை அனுமதிக்க வலியுறுத்துகின்ற உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு சரியானதுதானா? 

பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை உள்ள மாநில அரசின் நிர்வாக முடிவை புறந்தள்ளிவிட்டு நீதிமன்றம் பேரணிக்கு அனுமதி வழங்குவதற்கு ஒப்புதல் கொடுத்தது அம்மக்களை அவமதிப்பதாகாதா?

எல்லாவற்றையும் மீறி அப்பேரணி நடைபெறும் பட்சத்தில் அதில் ஏதேனும் கொடுஞ்செயல் விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்றால் அதற்கு யார் பொறுப்பேற்பது?

தமிழகத்தின் பொது அமைதியை கருதி சட்டம் ஒழுங்கு காக்க மாநில அரசு எடுக்கும் வரலாற்று முக்கிய வாய்ந்த இம்முடிவை கூட நீதிமன்றங்கள் ஏற்க முன்வராது என்றால் மாநிலத்தை ஆள்வது நீதிமன்றமா? சட்டமன்றமா? எனும் எளிய மக்களின் கேள்விக்கு என்ன பதில் உண்டு? 

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எந்த காலத்திலும் அனுமதி வழங்கக் கூடாது என தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இதுவரை தமிழகத்தை ஆண்ட அரசுகள் அனுமதி வழங்காத நிலையில் தற்போது ஆளும் திமுக அரசு நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறாது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையையே ஒரு காரணமாக கூறுவது வலுவற்ற வாதம் இல்லையா? காந்தி ஜெயந்தி அன்று மட்டுமல்லாது எந்த நாளிலும் பேரணி நடத்தினாலும் தமிழகத்தில் அமைதி குலையும் என வாதிட வேண்டிய தமிழக அரசு மற்ற நாட்களில் நடத்துவது சிக்கல் இல்லை என உயர் நீதிமன்றத்தில் கூறியிருப்பது மோசடித்தனம் இல்லையா? எதற்கு இந்த குழப்பவாதம்? இரட்டை வேடம்?

ஆகவே இவ்விவகாரத்தில் தமிழக அரசு சீரிய கவனம் எடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஆர்எஸ்எஸ்-ஸின் பேரணிக்கான தடையை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why this confusion for DMK and Double role The Supreme Court should go to ban the RSS rally


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->