காதல் மனைவியை கொன்றது ஏன்?" – கைதான டிரைவர் வாக்குமூலத்தில் பரபரப்பு!
Why did love kill the wife? Shocking revelations in the drivers statement
காதலித்து திருமணம் செய்த மனைவியை தலையில் தாக்கி கொன்ற மினிபஸ் டிரைவர் முத்துக்குமார், தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த மினிபஸ் டிரைவர் முத்துக்குமார் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினமணியன்குடியை சேர்ந்த ஜாய்ஸ் என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக காதல் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 29-ந்தேதி மனைவி ஜாய்ஸ் தலையில் காயத்துடன் மயக்கமான நிலையில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தநிலையில் முத்துக்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். விசாரணையில் மனைவியை அவர் அடித்து கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
அப்போது அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், காதல் திருமணமாக இருந்த வாழ்க்கை ஒரு கட்டத்தில் சந்தேகத்தில் முடங்கியது.ஜாய்ஸின் நடத்தை பற்றி கேட்கவே, தகராறு பெரிதாகியது.
கோபத்தில் பூரி கட்டையால் அவளைத் தலையில் அடித்தேன்.கீழே விழுந்து மயக்கம் தெளியவில்லை. பயத்தில் 108-ஐ அழைத்தேன்.ஆனால், மருத்துவமனை சென்றதும், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்."
இதையடுத்து முத்துக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.சந்தேகம், கோபம், நம்பிக்கை தடுமாற்றம்"இவை குடும்பங்களை அழிக்கின்றன – உரையாடல், சிந்தனை, மனநிலை அறிவு என்பவை இல்லாத காதல், பகைமையில் முடிகிறது.
English Summary
Why did love kill the wife? Shocking revelations in the drivers statement