அடுத்து பறிபோக இருக்கும் எம்.எல்.ஏ தொகுதி.? ஆட்சியை இறுக பிடிக்குமா அதிமுக..? தேர்தல் முடிவு காட்டிய அறிகுறி.! - Seithipunal
Seithipunal


தற்போது நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இதன் பிறகு  நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், அதிமுக பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் என்றால் ஒரு தொகுதியை கழித்து விட்டு  233 சட்டமன்ற தொகுதிகளே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அப்படி இருக்கும்போது, 117 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர் வரை 109 எம்.எல்.ஏ.க்கள் பலம்  மட்டுமே கொண்டதாக இருந்தது. இடைத்தேர்தலில் குறைந்த பட்சம் 8 இடங்களை பிடித்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் நிலவி வந்தது.

தொடக்கத்தில் இருந்தே இடைத்தேர்தலிலும் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகித்தாலும் இறுதியில் அதிமுக 9 இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

இதனால் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றும் ஒன்று செய்ய முடியாத நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும், சட்டப்பேரவையில் பலம் பொருந்திய எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Where-needed-Being-successful-ADMK-Regime-No-danger


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->