சட்டம் ஒழுங்கு எங்கே...? காஞ்சிபுரம் அருகே பயங்கரம்...! 2 வாலிபர்களை துடிதுடிக்க வெட்டிக்கொலை செய்த கும்பல்...! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகிலுள்ள அமரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமரம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் லோகேஷ் என்பவரின் வீட்டில் தங்கியிருந்த பரத் மற்றும் சீனு என்ற 2 இளைஞர்களை குறிவைத்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அரிவாள்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.

இந்த கொடூர தாக்குதலால் அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த ரத்தக்கலவரம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்தச் சம்பவம் சில நிமிடங்களில் கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த இரட்டை கொலை முன்விரோதத்தின் பின்னணியில் நடந்ததா அல்லது காதல் தொடர்பான மோதலால் அரங்கேறியதா என்ற பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 6 பேர் கொண்ட கும்பலை அடையாளம் காணும் பணியும் வேகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க மணிமங்கலம் காவலர்கள் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Where law and order Terror near Kanchipuram gang that brutally hacked and killed 2 youths


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->