சொத்து வரியை இம்மாத இறுதிக்குள் செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் தொழில் வரியினை வருகின்ற 31ஆம் தேதிக்குள் செலுத்தி வட்டி விதிப்பினை தவிர்க்குமாறு ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய வருவாய் ஆதாரங்களாக  சொத்துவரி/தொழில் வரி  போன்ற வருவாய் இனங்கள் உள்ளன. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு இதுநாள் வரை சொத்துவரியினை 8,18,451  சொத்து உரிமையாளர்களும், தொழில் வரியினை 80,496   நபர்களும்  செலுத்தியுள்ளனர். 

சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய  சொத்துவரி மற்றும் தொழில் வரியினை எளிதாக செலுத்தும் வகையில், சொத்து உரிமையாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி/தொழில் வரியை மண்டல அலுவலகங்கள்/வார்டு அலுவலகங்கள், இணையதளம், கைபேசி செயலி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள்/உரிமம்  ஆய்வாளர்கள் வாயிலாக செலுத்த வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலமாக சொத்துவரி/தொழில் வரி  செலுத்தும்போது, ஏதேனும் குறைபாடுகள்/சிக்கல்கள் ஏற்படின், வரி செலுத்துவோர் பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘1913’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யவும், அதனடிப்படையில் தீர்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியினை வருகிற 31ஆம் தேதிக்குள் செலுத்தி வட்டி விதிப்பினை தவிர்க்குமாறு அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WealthTax chennai corporation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->