அந்த சமூகத்தினர் மட்டும் தண்ணீர் பிடிக்கக்கூடாது என சாமி உத்தரவு.! வந்தவாசி அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அருகே பொன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ளது. இதன் வளாகத்தில் கோவில் சார்பில் கைப்பம்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கப்பெறும் நீர் சுவையாக இருக்கும்.

அந்த ஊரில் குடிநீர் பிரச்னை காரணமாக அனைவரும் கோவில் வளாகத்தில் உள்ள கைப்பம்பில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருள் வந்து சாமியாடி குறிப்பிட்ட சமூகத்தினர் கோவிலில் உள்ளே தண்ணீர் பிடித்து செல்வதால் தான் மழை பெய்யாமல் இருக்கின்றது. அவர்களை கோவிலின் உள்ளே அனுமதிக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார். 

இதனால் கோவில் பூசாரியான கருணா என்பவர் பூஜை செய்த பின்னர் தண்ணீர் பிடிக்கலாம் என ஒரு பகுதியினரிடம் தெரிவித்துள்ளார்.இதனால் அந்த பிரிவினர் ஆத்திரமடைந்து மேல்மருவத்தூர் சாலையில் மாணவிகள் விடுதி முன்பாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார், அம்மக்களிடம் பேச்சுவார்த்தை, நடத்திய பின்னர் களைந்து சென்றனர். அப்பகுதியில் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

water problem in vandhavasi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->