ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு ..! குளிக்க தடை தொடர்கிறது...! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையால் விட்டு விட்டு பெய்த மழை காரணமாக அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு சில நாட்களுக்கு முன் வினாடிக்கு 28000 கனஅடி நீர் வந்த நிலையில், நேற்று அது 20,000 -மாகவும், இன்று காலை 8 மணி நிலவரப்படி 18000 கன அடியாகவும் குறைந்தது.

மேலும், அதிக நீர்வரத்து இருந்தபோதும்,  சினிபால்ஸ், மெயின் அருவி,ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டிக் கொண்டே இருந்தது.

இதனிடையே,காவிரி ஆற்றில் குளிக்க தடை இன்று 9-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் சேவைக்கு மட்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Water flow declines in Okenakkal Bathing ban continues


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->