யார் யாருக்கு கிரகணம் பிடிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!“2026 தே.மு.தி.க.வின் காலம்” !பிரேமலதா விஜயகாந்த்
wait and see who likes the eclipse 2026 is the time of the Premalatha Vijayakanth
திருவாரூரில் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற பெயரில் தே.மு.தி.க.வின் பிரசாரம் தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கேப்டன் விஜயகாந்த் நினைவாக ரதயாத்திரையும் நடைபெற்று வருகிறது.
இதன் பகுதியாக திருவாரூரில் பிரேமலதா விஜயகாந்த் பிரசார பயணத்தை மேற்கொண்டார். அப்போது பழைய பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கடைவீதி, நேதாஜி ரோடு, கிழவிதி வழியாக ரோடு ஷோவும், பொதுமக்களுடன் நடந்து சென்று சந்திப்பும் மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பெருமளவிலான தொண்டர்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலர் அவருடன் செல்பி எடுத்தனர். முரசை அடித்து தொண்டர்களில் உற்சாகம் ஏற்படுத்திய பிரேமலதா, பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:“தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து வருகிறோம். எங்கும் தே.மு.தி.க.விற்கு எழுச்சியான வரவேற்பு கிடைக்கிறது.
வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தல், தே.மு.தி.க.வின் காலமாகும். அப்போது நாம் அமைக்கும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.கேப்டன் விஜயகாந்த் எப்போதும் நம்முடன் உள்ளார். அவரது உணர்வும், சொத்தும் தமிழக மக்கள் தான்.
திருவாரூருக்கு வந்தவுடன் மக்கள், “ரோடு வசதி இல்லை, ரெயில் வசதி இல்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை” என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவை அனைத்தும் 2026ல் களையப்படும்.
ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.இன்றிலிருந்தே தே.மு.தி.க.வின் 2.0 கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது.இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.
English Summary
wait and see who likes the eclipse 2026 is the time of the Premalatha Vijayakanth