வாக்கு பெட்டிக்கு தீ வைப்பு தேர்தல் நிறுத்தம், போலீஸ் குவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட வார்டு, உறுப்பினர்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.

 27 மாவட்டங்களில், முதல் கட்டமாக 91 ஆயிரம் ஊரக  உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிளும் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாப்பரப்பாக்கம்  வாக்குச் சாவடியில் இருந்த வாக்கு பெட்டிக்கு தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாக்குச்சாவடி புகைமண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் அந்த வாக்குச்சாவடியில் தேர்தலை நிறுத்தி. வாக்குச்சாவடியில் இருந்த அரசியல் கட்சியின் ஏஜெண்டுகள் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றினர்.  

இதற்கிடையே  பாப்பரப்பாக்கம்  வாக்குச் சாவடிக்கு விரைந்து வந்த தாசில்தார் வாக்குபெட்டிக்கு தீ வைத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vote box burn in thiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->