விருதுநகரில் பரபரப்பு! மருத்துவமனைக்கு வந்த பைக்கை அபேஸ் செய்த காவலர்...! - சிசிடிவியில் சிக்கிய 'திருட்டு' ஏட்டு...!
Virudhunagar trouble Policeman who attacked bike carrying man hospital Theft note caught CCTV
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா ஈச்சனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (36), கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 19-ஆம் தேதி விருதுநகர் அருகே கட்டனார்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கொடூர வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதில் ஆனந்தனின் உறவினரான பேச்சியம்மாளும் பலியானார்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையறிந்த ஆனந்தன், தனது சகோதரர்கள் மாரிமுத்து மற்றும் குமார் ஆகியோருடன் கடந்த 20-ஆம் தேதி மோட்டார்சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு பூங்கா அருகே வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மோட்டார்சைக்கிள் காணாமல் போனது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
அதன்படி, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் மீனாட்சி சுந்தரம் (49) என்பவரே அந்த மோட்டார்சைக்கிளை திருடியதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, விருதுநகர் கிழக்கு காவலர்கள் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய மீனாட்சி சுந்தரம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருடிய சம்பவத்தில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட இந்த நிகழ்வு, பொதுமக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Virudhunagar trouble Policeman who attacked bike carrying man hospital Theft note caught CCTV