பிப் 30 உங்க அப்பா இறந்துட்டாரு.. இந்தா சர்டிபிகேட்..! லோன் வாங்க காத்திருந்தவருக்கு ஹார்ட் அட்டாக் ஷாக்.! - Seithipunal
Seithipunal


உலகத்திலேயே இல்லாத ஒரு தேதியைக் குறிப்பிட்டு, தாசில்தார் அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் வழங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

சுந்தரா டிராவல்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் முரளி மற்றும் வடிவேல் வாங்கிய கடனை வங்கி அதிகாரி வந்து கேட்கும்போது, பிப்ரவரி 30 ஆம் தேதி தருவதாக உறுதி அளித்து அவரை அனுப்பி வைப்பார்கள். கடன் வந்துவிடும் என்ற நம்பிக்கையில், வங்கி அதிகரிக்கும் மகிழ்ச்சியுடன் இருக்கும் வேலையில், அவரது முகத்தில் பேருந்தின் புகைபோக்கியில் இருந்து வெளியேறும் கருப்புநிற புகையை பூசிவிட்டு செல்வார்கள். 

பிப்ரவரி 30 என்பது உலகளவில் இல்லாத ஒரு நாட்கள் ஆகும். அந்த வகையில், அரசு பதிவேடுகளில் இறப்பு சான்றிதழில் பிப்ரவரி 30 ஆம் தேதி ஒருவர் மரணமடைந்ததாக சான்றிதழ் வழங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் பெயம்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அழகர்சாமி. இவர் கடந்த 2000 ஆம் வருடம் இறந்து விட்ட நிலையில், அண்மையில் அழகர்சாமியின் இளைய மகன் உதயகுமார் கடன் வாங்குவதற்கு தனியார் வங்கியின் உதவியை நாடியுள்ளார். 

அப்போது வங்கி அதிகாரிகள் அவரிடம் வாரிசு சான்றிதழ் கேட்கவே, இதனை தொடர்ந்து உதயகுமார் தாசில்தார் அலுவலகம் மூலமாக வாரிசு சான்றிதழை வாங்கி வங்கி அதிகாரியிடம் வழங்கியுள்ளார். அதனை அதிகாரிகள் சரி பார்க்கையில், உதயகுமாரின் தந்தை அழகர்சாமி இறந்த தேதி 30.02.2000 என்று எழுதப்பட்டிருந்தது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் போலியான சான்றிதழ் கொண்டு வந்திருப்பதாக கூறி, உதயகுமாருக்கு கடன் தர மறுப்பு தெரிவிக்கவே, வாரிசுசான்றிதழ் மட்டுமல்லாது அழகர்சாமியின் இறப்பு சான்றிதழும் அவரது இறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து உதயகுமார் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், அதிகாரிகள் உதயகுமாரின் தந்தையின் இறப்பு சான்றிதழை மாற்றித் தருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அரசு அதிகாரி அலட்சியமாக செயல்பட்டு, இல்லாத ஒரு தேதியில் இறப்பு சான்றிதழ் சம்பவம் விருதுநகர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள சான்றிதழ்கள் வாங்கும் போது, நமது தகவல்கள் சரியாக உள்ளதா? என சோதனை செய்து பார்த்துக்கொள்வது நல்லது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Tahsildar Certificate 30 Feb date Death Certificate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->