கேலி-கிண்டல்.. தட்டிக்கேட்டவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை.. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் பெண்களை கேலி செய்தவரை தட்டிக்கேட்ட நிலையில், தட்டிக்கேட்டவர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிராமம் பட்டகுளம். பட்டகுளத்தை அடுத்துள்ள அரிய நாயகிபுரம் பகுதியை சார்ந்தவர் முருகன் (வயது 29). இதே ஊரை சார்ந்தவர் லாரன்ஸ் (வயது 21). லாரன்சுக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

மேலும், மதுபோதையில் அவ்வப்போது பெண்களை கேலி - கிண்டல் செய்வதும் வழக்கம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை கவனித்த முருகன், லாரன்ஸை பலமுறை அவ்வாறு செயல்படக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் முருகனின் மீது லாரன்ஸ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று இரவு முருகன் தனது வீட்டிற்கு முன் நின்றுகொண்டு இருக்கையில், கையில் அரிவாளுடன் வருகை தந்த லாரன்ஸ், முருகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பலத்த வெட்டுக்காயம் அடைந்த முருகன், சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

கண்ணிமைக்கும் நேரத்தில் கொடூர கொலையை அரங்கேற்றிய லாரன்ஸ் அங்கிருந்து தப்பி செல்ல, இந்த விஷயம் தொடர்பாக கிருஷ்ணன்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கிருஷ்ணன்கோவில் காவல் துறையினர் லாரன்ஸை தேடி வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virudhunagar Srivilliputhur Krishnankovil Near Village Man Murder Another one He Advice Do not Troll Woman


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->